ADDED : அக் 30, 2024 05:15 AM
பெங்களூரு : பெங்களூரு நகரவாசிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நோக்கில், குறைந்த விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை, மத்திய அரசு இன்று துவக்கி வைக்கிறது.
மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோகத்துறை, 'பாரத்' திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசியை 34 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.
இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் தீபாவளி பரிசாக பெங்களூரு நகரவாசிகளுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் விற்கும் திட்டம், பெங்களூரு நந்தினி லே - -அவுட்டில் உள்ள, வீர ராணி கித்தூர் சென்னம்மா மைதானத்தில் இன்று துவக்கப்படுகிறது.
மத்திய உணவு மற்றும் பொது வினியோக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய உணவு மற்றும் பொது வினியோக இணை அமைச்சர்கள் ஜெயந்தி பாய் பம்பானியா, பி.எல்.வர்மா, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் இயக்குனர் சிவலிங்கப்பா உள்ளிட்டோ கலந்து கொள்கின்றனர்.
ஒரு கிலோ கோதுமை மாவு 30 ரூபாய்க்கும்; ஒரு கிலோ கடலை பருப்பு 70 ரூபாய்க்கும்; ஒரு கிலோ பாசிப்பருப்பு 107 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரிசியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.