ADDED : அக் 19, 2024 10:59 PM
பெங்களூரு: 'தீபாவளியை முன்னிட்டு, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து கார்வாருக்கும்; யஷ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கும், அக்., 30ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தீபாவளியை முன்னிட்டு பயணியர் வசதிக்காக பெங்களூரு நகரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் எண் 06597: பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து அக்., 30ம் தேதி மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு கார்வார் சென்றடையும்;
மறுமார்க்கத்தில் எண் 06598: கார்வாரில் இருந்து அக்., 31ம் தேதி மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு, விஸ்வேஸ்வரய்யா முனையத்திற்கு நவ., 1ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வந்தடையும்.
எண்: 06565: யஷ்வந்த்பூரில் இருந்து அக்., 30 ம் தேதி இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:45 மணிக்கு மங்களூரு சந்திப்பு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் எண் 06566: மங்களூரு சந்திப்பில் இருந்து அக்., 31ம் தேதி மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு, நவ., 1ம் தேதி இரவு 9:15 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.