தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கட்சிக்கு அவப்பெயர்; மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட்: முதல்வர் வருகை முன்னிட்டு தி.மு.க. நடவடிக்கை

கட்சிக்கு அவப்பெயர்; மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட்: முதல்வர் வருகை முன்னிட்டு தி.மு.க. நடவடிக்கை

கட்சிக்கு அவப்பெயர்; மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட்: முதல்வர் வருகை முன்னிட்டு தி.மு.க. நடவடிக்கை


UPDATED : மே 29, 2025 04:15 PM

ADDED : மே 29, 2025 08:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 29, 2025 04:15 PM ADDED : மே 29, 2025 08:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: முதல்வர் ஸ்டாலின் மே 31ல் மதுரை பயணிக்க உள்ள நிலையில், அமைச்சர் தியாகராஜன் தீவிர ஆதரவாளரான மேயரின் கணவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

மதுரையில் ஜூன் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடக்கிறது. அதை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் மே 23 ல் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர்.

ஆனால் அதே நாள், அதே நேரத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். இந்த கூட்டத்தை தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். ஆனாலும் அ.தி.மு.க., ஆதரவுடன் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினார் மேயர் இந்திராணி.

மேயரின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அவரது கணவர் பொன்வசந்த் உள்ளார் என புகார்கள் எழுந்தன. இப்பப்பட்ட சூழலில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி பொன் வசந்த் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை உத்தங்குடியில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. அதற்காக மே 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்ல உள்ளார்.

இருநாள் நிகழ்வில் ரோடு ஷோ, பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இருக்கும் நிலையில் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது, கட்சியில் நிலவும் உட்பூசலை காட்டுவதாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us