திமுக அல்லது அதிமுகவுக்கு தான் வெற்றி: ஸ்ரீதர் வேம்பு கணிப்பு
திமுக அல்லது அதிமுகவுக்கு தான் வெற்றி: ஸ்ரீதர் வேம்பு கணிப்பு
ADDED : மே 01, 2026 07:41 AM

புதுடில்லி: ''மிகச் சிறந்த களப்பணி, பணபலம் இருப்பதால், திமுக அல்லது அதிமுக வெற்றி பெறும் என்றே நான் இன்னும் நினைக்கிறேன்'' என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
அவரது பதிவு: டில்லி விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின்போது, பெயரை வைத்துப் பார்த்தால் ஒடிசாவைச் சேர்ந்தவர் போலத் தெரிந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, என் உடையைப் பார்த்து நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்று யூகித்து, உற்சாகமாக 'சார், விஜய் தளபதி ஜெயிப்பாரா?' என்று கேட்டார்.
முன்தினம், என் கிராமத்தைச் சேர்ந்த, அரசியல் சாதுரியம் மிக்க, பெரிய சினிமா ரசிகர் அல்லாத ஒரு விவசாயி, 'விஜய் நம் ஓட்டுச்சாவடியில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தப் போகிறார்' என்று என்னிடம் கூறினார். அவர் அண்ணாமலையின் தொண்டராக இருந்தவர்.
சமீபத்தில் துக்ளக் ஆய்வு ஒன்றில் கூறியது போல, தமிழகத்தில் விஜய் மீதான ஆதரவு அலையை சினிமா அல்லது கவர்ச்சி என்று ஒதுக்கிவிடக் கூடாது. சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் மாற்றத்திற்கான தங்கள் நம்பிக்கையை விஜய் மீது வைத்துள்ளனர்.
கருத்துக் கணிப்புகளை நம்பக்கூடாது என்பதற்குக் காரணம், ஒரு மும்முனை போட்டி சூழலில், புதிய கட்சி எல்லாப் பக்கங்களிலிருந்தும் வாக்காளர்களைத் தன் பக்கம் இழுக்கும்போது, யார் வெற்றி பெறுவார்கள் என்பதை நம்மால் கணிக்க முடியாது.
மிகச் சிறந்த கள வேலை, பணபலம் இருப்பதால், திமுக அல்லது அதிமுக வெற்றி பெறும் என்றே நான் இன்னும் நினைக்கிறேன். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்தில் விஜயின் அரசியல் எழுச்சி பயணம் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
