தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தி.மு.க., பைல்ஸ் -3: அண்ணாமலை வெளியிட்ட 4வது ஆடியோ

தி.மு.க., பைல்ஸ் -3: அண்ணாமலை வெளியிட்ட 4வது ஆடியோ

தி.மு.க., பைல்ஸ் -3: அண்ணாமலை வெளியிட்ட 4வது ஆடியோ


ADDED : பிப் 17, 2024 06:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 06:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., எம்.பி., ஆ.ராசா - முன்னாள் டி.ஜி.பி. ஜாபர் சேட் ஆகியோரின் தொலைப்பேசி உரையாடல் இடம்பெற்றுள்ள 4வது வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2023 ஏப்., 14ல், தி.மு.க., பைல்ஸ் பாகம் ஒன்று வெளியிட்டார். அதில் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.

அதை தொடர்ந்து, ஜூலை மாதம் தி.மு.க., பைல்ஸ் பாகம் இரண்டு வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடலை வெளியிட்டு இருந்தார். பிறகு கடந்த 17ம் தேதி, 2வது ஆடியோ எனக்கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் ஜாபர் சேட் பேசிய ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார். ஜன.,27 ல் ஆ.ராசா மற்றும் ஜாபர்சேட் பேசும் 3வது வீடியோவையும் வெளியிட்டார்.

இந்நிலையில் அண்ணாமலை இன்று ( பிப்.,17) 4வது ஆடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், தி.மு.க., எம்.பி., ஆ.ராசா மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் உரையாடும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆடியோவுடன் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், ரெய்டு பற்றிய தகவல் முன்கூட்டியே பகிரப்பட்டதால் அனைத்து முக்கிய ஆதாரங்களும் அழிக்கப்படலாம். மாற்றப்படலாம். 2ஜி ஊழலில் தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி. பழனிசாமியின் பெயரை முழுவதும் மூடி மறைப்பதில் காங்கிரசின் தலையீடு அம்பலம் ஆகி உள்ளது. இது போல் மேலும் ஆடியோ வெளி வரும். இவ்வாறு அந்த வீடியோவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us