/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்கி 9ம் தேதி வரை நடக்கிறது
/
தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்கி 9ம் தேதி வரை நடக்கிறது
தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்கி 9ம் தேதி வரை நடக்கிறது
தி.மு.க., சார்பில் விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்கி 9ம் தேதி வரை நடக்கிறது
ADDED : ஜன 05, 2026 04:39 AM
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், அமைச்சரு-மான முத்து
சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தை பொங்-கலை, முதல்வர் உத்தரவுப்படி திராவிட பொங்கல்-சமூக நீதி நாளாக கொண்டாடி, போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படவுள்-ளது.
இதன்படி நாளை முதல் 17ம் தேதி வரை தெற்கு மாவட்டத்-துக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்கள், பகுதிகளில் விளை-யாட்டு போட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கோல-போட்டி உள்ளிட்ட சிறுசிறு விளையாட்டு போட்டி நடக்கிறது. 6ம் தேதி ஆண்கள் கிரிக்கெட் போட்டி, சோலார் யங் இந்தியா எஸ்.எம்.டி., மைதானத்தில் நடக்கிறது. வில்லரசம்பட்டி ஸ்போர்ட்ஸ் வில்லேஜில், 7ல் ஆண், பெண்களுக்கு கோ-கோ மற்றும் எறிபந்து போட்டி நடக்கிறது. 8ம் தேதி தாண்டாம்
பாளையம் மைதானத்தில் ஆண்கள் வாலிபால் போட்டி, ஆண்கள் கபடி வீரப்பன்சத்திரம் காவிரி சாலை, ஆண்கள் கிரிக்கெட் காலிங்கராயன் லட்சுமி நகரில் நடக்கிறது.
9ம் தேதி பெண்கள் மற்றும் ஆண்கள் கால்பந்து அறச்சலுாரில் நடக்கிறது. இதேபோல் பெண்கள் கோ-கோ மொடக்குறிச்சி-யிலும், பெண்கள் தடகளம் வெள்ளோட்டிலும், ஆண்-பெண் வாலிபால் மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய மைதானத்-திலும் நடக்கிறது. தட்டு, ஈட்டி எறிதல் ஆண், பெண்கள் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் வில்லரசம்பட்டி, கால்பந்து கருங்கல்பா-ளையம் மஹாஜன பள்ளி, 100, 400 மீ ஓட்டம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் வில்லரசம்பட்டியில் நடக்கிறது. நிகழ்ச்சியில் கட்சி-யினர் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

