தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'அரசியலில் இழுக்காதீர்கள்': ராணுவ தளபதி கருத்து

'அரசியலில் இழுக்காதீர்கள்': ராணுவ தளபதி கருத்து

'அரசியலில் இழுக்காதீர்கள்': ராணுவ தளபதி கருத்து


UPDATED : பிப் 20, 2025 02:54 PM

ADDED : பிப் 20, 2025 05:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2025 02:54 PM ADDED : பிப் 20, 2025 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''ராணுவத்தை அரசியலில் இழுக்க வேண்டாம்,'' என, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.

பார்லி.,யில் இம்மாத துவக்கத்தில் பேசிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'நம் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், நம் நிலப்பரப்பில் சீனப் படைகள் இருப்பதாக ராணுவமே கூறுகிறது' என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், ராகுலுக்கு விரிவாக பதிலளித்தார்.

இந்நிலையில் நேற்று, தனியார் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியிடம், ராகுலின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ''ராகுலின் குற்றச்சாட்டுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசியல் ரீதியில் பதிலளித்து விட்டார். இது தொடர்பாக ராணுவ அமைச்சகமும் விளக்கம் அளித்து விட்டது. என்னை பொறுத்தவரை, ராணுவத்தை அரசியலில் இழக்கக் கூடாது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us