டெய்லி இதே வேலை தான் செய்றாங்களா; ரயில் கவிழ்க்கும் முயற்சிகள் உ.பி.,யில் அதிகரிப்பு
டெய்லி இதே வேலை தான் செய்றாங்களா; ரயில் கவிழ்க்கும் முயற்சிகள் உ.பி.,யில் அதிகரிப்பு
ADDED : செப் 10, 2024 02:24 PM

புதுடில்லி: கடந்த 3 மாதங்களில் ரயில் கவிழ்க்கும் முயற்சி அதிகரித்து வருவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
கடந்த ஆக., மாதம் முதல் தற்போது வரை 18 முறை ரயிலை கவிழ்ப்பதற்காக முயற்சிகள் நடந்த நிலையில், அதற்காக தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்கள், சைக்கிள்கள், இரும்பு கம்பிகள் மற்றும் சிமென்ட் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆக., மாதம் 15 முறையும், செப்.,மாதம் 3 முறையும் ரயிலை கவழ்க்க முயற்சிகள் நடந்த நிலையில், உ.பி.,யில் தான் அதிகம் என தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ம.பி.,ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கடந்த ஆக., மாதம் சபர்மதி ரயில், கான்பூர் அருகே தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்ட பொருளின் மீது மோதியதில் 20 பெட்டிகள் தடம்புரண்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று முன்தினம், கான்பூரில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டு ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. ஆனால், டிரைவர் முன்னரே, சமயோசிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இது தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

