ADDED : செப் 27, 2024 11:54 PM

விளைபொருட்களுக்கு எம்.எஸ்.பி., தேவை என்று ராகுல் கூறி வருகிறார். எம்.எஸ்.பி., என்றால் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ராகுலுக்கு தெரியுமா? எந்த பயிர், எந்த பருவத்தில் விளையும் என்பதாவது அவருக்கு தெரியுமா? எதுவுமே தெரியாமல் ஓட்டுக்காக எதையாவது பேசக் கூடாது.
அமித் ஷா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
மக்களை பாதிக்கும் வரிகள்!
இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி., ஆகிய அனைத்தும் மக்களை பொருளாதார ரீதியாக பாதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சிறு, குறு நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.
ராகுல், முன்னாள் தலைவர், காங்கிரஸ்
நசுக்கி துாக்கி எறிவோம்!
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நாட்டில் எங்காவது பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றால், அவர்களுக்கு மிக மோசமான முடிவை கண் முன் காட்டுவோம். இது புதிய இந்தியா. பயங்கரவாதத்துடன் சமரசம் செய்ய மாட்டோம், நசுக்கி துாக்கி எறிவோம்.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,

