ADDED : டிச 27, 2025 12:14 AM

நாட்டின் பல்வேறு இடங்களில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, கிறிஸ்துவர்களை ஹிந்து அமைப்பினர் தாக்கியது கண்டனத்துக்குரியது. வங்கதேசத்தில் தான் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடக்கிறது. நம் நாடும் வங்கதேசம் போல மாற வேண்டுமா? நாம் எந்த மாதிரியான இந்தியாவை விரும்புகிறோம்?
- பவன் கெரா, செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்
முகத்திரை கிழியும்!
மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை வெளியேற்ற, முதல்வர் மம்தா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஆளும் திரிணமுல் காங்., அமைதி காத்து வருகிறது. ஓட்டு வங்கி அரசியலுக்காக அக்கட்சி நாடகம் போடுகிறது. விரைவில் அக்கட்சியின் முகத்திரை கிழியும்.
- நலின் கோலி, செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
துணிவு இருக்கா?
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வீர வசனம் பேசி வருகிறார்; எங்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறார். அவருக்கு துணிவு இருந்தால், 2026 ஜன., 1 முதல், ஏழை பெண்களுக்கு தலா, 1 சவரன் தங்கம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- ராமா ராவ், செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி

