ADDED : செப் 22, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: மேற்கு வங்க பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜூனியர் டாக்டர்கள், 42 நாட்களுக்கு பின் நேற்று பணிக்கு திரும்பினர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஆக., 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
இதை கண்டித்தும் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுடனான பேச்சுக்கு பின் அவர்கள் நேற்று அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பணிக்கு திரும்பினர்.
இருப்பினும் புறநோயாளிகள் பிரிவுகளுக்கான பணிகள் புறக்கணிக்கப்பட்டுஉள்ளன.