டாக்டர்களின் புரியாத மருந்து சீட்டு கையெழுத்து : ஒடிசா ஐகோர்ட் ‛ குட்டு'
டாக்டர்களின் புரியாத மருந்து சீட்டு கையெழுத்து : ஒடிசா ஐகோர்ட் ‛ குட்டு'
ADDED : ஜன 08, 2024 10:35 PM

புவனேஸ்வரம்:
அரசு / தனியார் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டை கையால்
எழுதாமல் கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும். இது தொடர்பாக அரசு
சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என ஒடிசா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால், நோயாளிகள்
மற்றும் அவரது உறவினர்கள், பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து
புரியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் ஒடிசா உயர்நீதிமன்றத்தில்
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதி பனிகிராஹி, அரசு,
தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு
சிரமம் ஏற்படுகிறது. உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால்
நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
அரசு
மற்றும் தனியார் டாக்டர்கள், மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை
கையால் எழுதுவதை தவிர்த்து ,கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என
ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து
வைத்தார்.