ஜம்மு காஷ்மீரில் 17 பேரை காவு வாங்கிய மர்ம காய்ச்சல்! மருத்துவர்களுக்கு விடுப்பு ரத்து
ஜம்மு காஷ்மீரில் 17 பேரை காவு வாங்கிய மர்ம காய்ச்சல்! மருத்துவர்களுக்கு விடுப்பு ரத்து
ADDED : ஜன 25, 2025 11:21 AM

ரஜௌரி; ஜம்மு காஷ்மீரில் 17 பேர் மர்ம காய்ச்சலால் பலியாகி உள்ள நிலையில், அவரச மருத்துவ சேவை அடிப்படையில் மருத்துவர்கள் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் இன்னமும் மருத்துவ சிகிச்சையில் இருக்கின்றனர். உயிரிழப்புக்கு என்ன காரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தொடர் காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்த ஜம்முகாஷ்மீர் அரசு மருத்துவக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந் நிலையில் மருத்துவ அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, மருத்துவர்களுக்கான விடுப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்த ரஜௌரி மருத்துவமனை தலைவர் அமர்ஜித்சிங் பாட்டியா கூறியதாவது;
மருத்துவ அவசர கால சூழல் காரணமாக மருத்துவர்களுக்கான விடுப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 17 பேர் இதுவரை காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். 10 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

