ADDED : அக் 15, 2024 12:16 AM
யாத்கிர் : டாக்டரின் அலட்சியத்தால் குழந்தை பெற்ற இளம்பெண் உயிரிழந்தார். டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அக்குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.
யாத்கிர், சஹாபுராவின் துாரனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் பவானி, 24.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன், சஹாபுராவில் உள்ள பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர், ரத்த பரி சோதனை செய்ய வேண்டும் என கூறினார். பவானியின் ரத்த மாதிரியைசேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினார். ஆனால் அறிக்கை வரும் முன்பே, அவருக்கு மருத்துவ மனையின் பெண் டாக்டர்,ஆப்பரேஷன் செய்து பிரசவம் நடத்தினார்.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில், அவருக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. இதே நேரத்தில்ரத்த பரிசோதனைவந்தது. அதில் அவருக்கு மஞ்சள் காமாலைஇருப்பது தெரிந்தது.
டாக்டர்கள் பீதி அடைந்தனர். தீவிரசிகிச்சைக்கு கலபுரகியின் யுனைடெட் மருத்துவமனைக்கு, பவானியை மாற்றினர்.
அங்குள்ள டாக்டர்கள், சஹாபுரா மருத்துவமனையில், பவானிக்கு சரியாக அறுவை சிகிச்சை செய்ய வில்லை. மற்றொருஅறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, கூறி மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்.
இதற்காக, 10 லட்சம்ரூபாய் கட்டணமும் வசூலித்தனர். ஆனால் பவானியின் ஆரோக்கியத்தில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. வயிற்று வலி அதிகரித்ததால், மீண்டும் சஹாபுரா மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பினர். சிகிச்சை பலனளிக்காமல், நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
'அரசு மருத்துவமனை பெண் டாக்டரின் குளறுபடியால் பவானி இறந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.