தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நெடுஞ்சாலை பணிகளை ஆவண படமாக்க உத்தரவு

நெடுஞ்சாலை பணிகளை ஆவண படமாக்க உத்தரவு

நெடுஞ்சாலை பணிகளை ஆவண படமாக்க உத்தரவு


UPDATED : அக் 10, 2026 09:51 PM

ADDED : அக் 10, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 09:51 PM ADDED : அக் 10, 2026 09:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: மொத்தம் 500 கோடி ரூபாய்க்கு மேலான மதிப்பில் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை தொடக்கம் முதல் நிறைவு வரை, 20 நிமிடங்கள் ஒடக்கூடிய ஆவணப்படமாக தயாரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மொத்தம் 500 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை, தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோவில் பதிவு செய்து, அதை ஆவணப் படமாக ஒப்பந்ததாரர்கள் உருவாக்க வேண்டும். இதற்காக, தொழில்முறை வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை ஒப்பந்ததாரர்கள் பணியமர்த்த வேண்டும்.

ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டுதல், சுரங்கப் பாதைகள் அமைத்தல், மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் கட்டுதல், பாலங்களுக்கான அடித்தளம் அமைத்தல், நவீன கட்டுமான இயந்திரங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பணிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.

கட்டுமானத்தின்போது ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சவால்கள், அவற்றின் தன்மை, அவற்றை தீர்க்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும். திட்டம் தொடங்கியது முதல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் வரையிலான அனைத்து முக்கிய நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இறுதியில், 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய ஆவணப் படத்தை உருவாக்க வேண்டும். இதில், திட்டத்தின் அனைத்துக் கட்டப் பணிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும். முக்கிய நெடுஞ்சாலை கட்டமைப்புகளை உருவாக்குவதில் உள்ள திட்டமிடல், ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் களப்பணிகள் ஆகியவற்றை பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ள இது உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us