தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/"டில்லி உஷ்ஷ்ஷ்..." பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., பிரச்னை தொடர்கிறது?

"டில்லி உஷ்ஷ்ஷ்..." பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., பிரச்னை தொடர்கிறது?

"டில்லி உஷ்ஷ்ஷ்..." பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., பிரச்னை தொடர்கிறது?


ADDED : செப் 07, 2025 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பா .ஜ.,விற்கும், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் பிரச்னை' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பல மாதங்களாக பேசப்பட்டு வந்தது. '75 வயதில் அரசியலிலிருந்து தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியது, பிரதமர் மோடிக்கும் பொருந்தும்' என பேசப்பட்டது. ஆனால், இதை மறுத்த மோகன் பகவத், 'எங்கள் இயக்கத்திற்கும், பா.ஜ.,விற்கும் எந்தவித பிரச்னையும் இல்லை; 75 வயது குறித்து நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டனர்' என கூறினார்.

'ஒரு வழியாக பிரச்னை ஓய்ந்துவிட்டது' என நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி. ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு நெருக்கமான முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வின் தேசிய தலைவராக பணியாற்றிய முரளி மனோகர் ஜோஷி பிரச்னையை கிளப்பியுள்ளார்.

சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகள் குறித்து, நாக்பூரில் ஒரு ரகசிய கூட்டம் நடந்தது. இதில், 80க்கும் மேற்பட்ட சீனியர் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் பங்கேற்றனர். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் குறித்து ஜோஷி பேசினார். 'ஒரு நாட்டின் முன்னேற்றத்தை, மக்களின் வருமானத்தை வைத்து மட்டும் எடை போட முடியாது; தற்போதைய பொருளாதார வளர்ச்சியால், மக்களின் நலன் முழுமை அடையவில்லை' என, அமர்த்தியா சென் கொள்கையை சுட்டிக் காட்டியுள்ளார் ஜோஷி.

சென்னிற்கும், பா.ஜ.,விற்கும் எப்போதுமே ஆகாது. மோடிக்கு எதிராக பேசி வருபவர் சென். இந்நிலையில், ஜோஷி பேசியது, பா.ஜ.,வில் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

'எங்கள் அமைப்பிற்கும், பா.ஜ.,விற்கும் எந்த சண்டையும் இல்லை' என, பகவத் சொல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன், இந்த ரகசிய கூட்டம் நடந்தது. ஆனால், இந்த செய்தி இப்போது வெளியாகியுள்ளது. வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் இதை கசிய விட்டனரா அல்லது ஜோஷியே இதை வெளியிட்டாரா என தெரியவில்லை.

ஆனால், 'பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பிரச்னை தொடர வேண்டும்' என, உள்ளே இருப்பவர்களே இதை செய்துள்ளனர் என்பது மட்டும் நிச்சயம். 'பிரச்னை முடியவில்லை; தொடர்கிறது' என்பது தான் டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் சூடான செய்தி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us