தோஹா-ஹாங்காங் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: ஆமதாபாத்தில் தரை இறக்கம்
தோஹா-ஹாங்காங் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: ஆமதாபாத்தில் தரை இறக்கம்
ADDED : அக் 14, 2025 04:36 PM

ஆமதாபாத்: தோஹாவிலிருந்து ஹாங்காங்கிற்குச் சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் ஆமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
தோஹாவிலிருந்து ஹாங்காங்கிற்கு போயிங் 777 க்யூ ஆர் 816, கத்தார் ஏர்வேஸின் விமானத்தில் இன்று பிற்பகலில் திடீரென கேபின் அழுத்தக்குறைவால் கோளாறு ஏற்பட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலைய கட்டுப்பாடுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, ஆமதாமாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் விமான திருப்பிவிடப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமான அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், தொழில்நுட்ப பரிசோதனை நடைபெற்று வருகிறது.
விமானக் குழுவினர் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் (ஏடிசி) ஒருங்கிணைந்து பாதுகாப்பான தரையிறக்கம் உறுதி செய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. தரையிறங்கிய பிறகு, அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். விமானம் மீண்டும் சேவையைத் தொடங்குவதற்கு முன்பு, கோளாறின் தன்மையைக் கண்டறிய கத்தார் ஏர்வேஸின் பொறியாளர்கள் விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாற விமான அதிகாரிகள் கூறினர்.