திருப்பதி கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை: பஞ்சாப் தொழிலதிபர் தாராளம்
திருப்பதி கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை: பஞ்சாப் தொழிலதிபர் தாராளம்
ADDED : ஆக 13, 2024 05:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பதிண்டா: பஞ்சாபை சேர்ந்த டிரிடென்ட் நிறுவனத்தின் தலைவர் ராஜிந்தர் குப்தா, திருமலை கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.
இந்தியாவின் முக்கியமான புண்ணிய தலங்களில் ஒன்றாக திருமலை விளங்குகிறது. வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இக்கோயிலுக்கு பலர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், ராஜிந்தர் குப்தா ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். இதற்கான செக்- ஐ திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினார். அப்போது, அவரின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்வி பிரன்தனா டிரஸ்ட்டிற்கு ராஜிந்தர் சிங் ரூ.21 கோடி நன்கொடை வழங்கினார் என தெரிவித்து உள்ளது.

