விமர்சனம் கூடாது… கருணாஸ் வரிசையில்… கண்டுக்காம விடுங்க… விஜய் பேச்சுக்கு ரியாக்சன்ஸ் இதோ!
விமர்சனம் கூடாது… கருணாஸ் வரிசையில்… கண்டுக்காம விடுங்க… விஜய் பேச்சுக்கு ரியாக்சன்ஸ் இதோ!
UPDATED : அக் 30, 2024 07:43 AM
ADDED : அக் 29, 2024 08:20 AM

விக்கிரவாண்டி மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கு அரசியல் கட்சியினர் மத்தியில் இருந்து ரியாக்சன்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில மட்டும் இங்கே!
* தமிழக வெற்றிக்கழகத்தால் அ.தி.மு.க.,வுக்கு எள்முனையளவும் பாதிப்பு இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து.
* விஜய் கட்சியின் பின்னணியில் பா.ஜ., இருக்கிறது. கமல், சரத்குமார், பாக்யராஜ், கருணாஸ் வரிசையில் கட்சி துவக்கியுள்ளார். வாழ்த்துக்கள் - சபாநாயகர் அப்பாவு
* புதிய கட்சி தொடங்கியுள்ள விஜயை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். மற்றதை கட்சி பார்த்துக் கொள்ளும் - ரகசிய விவாதத்தில் கட்சியினருக்கு முதல்வர் உத்தரவு
* நேற்று பிறந்த புதிய குழந்தை விஜய் கட்சி எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். அதிகம் விமர்சனம் செய்யக்கூடாது - கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுரை
* விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை; பா.ஜ.,வின் C டீம்: த.வெ.க., மாநாடு, பிரம்மாண்ட சினிமா மாநாடு. அ.தி.மு.க., தொண்டர்களை ஈர்க்கவே அக்கட்சி குறித்து பேசாமல் தி.மு.க., குறித்து விஜய் பேசியுள்ளார். எங்கள் கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பதால் கவர்னரைப் பற்றி பேசியுள்ளார்: சட்டத்துறை அமைச்சர், ரகுபதி.
* 'ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் த.வெ.க., கட்சி தலைவரும், நடிகருமான விஜய்யின் கற்பனை அதீதமாக உள்ளது,: வி.சி.க., திருமாவளவன்
* திராவிடமும், தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது. அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்து போகவில்லை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமான்.
நமது நிருபர்