ADDED : மார் 11, 2024 03:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல ஆண்கள் மோடி கோஷம் போடுகின்றனர். அதை, அவர்களது மனைவியர் தான் சரி செய்ய வேண்டும். உங்கள் கணவர் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவேன் என கூறினால், இனி சாப்பாடு கிடையாது என கூறுங்கள்.
- அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி
வளர்ச்சிக்கான துாதர்!
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் செயல்பாடு முடங்கி, மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்து ஊழலையும், குடும்ப அரசியலையும் ஒழித்து, வளர்ச்சிக்கான சர்வதேச துாதராக கவனம் பெற்றுள்ளார்.
- முக்தர் அப்பாஸ் நக்வி, முன்னாள் அமைச்சர்,பா.ஜ.,
'நீரோ மன்னன்' சித்தராமையா!
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கேள்விப்படாத அளவு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்களும், கால்நடைகளும் தண்ணீரின்றி தவிக்கின்றனர். ரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், தேர்தல் குறித்த கவலையில் முதல்வர் சித்தராமையா உள்ளார்.

