ADDED : அக் 27, 2025 06:47 AM

பீஹார் சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடக்கிறது. தே.ஜ., கூட்டணியும், இண்டி கூட்டணியும் மோதும் தேர்தலில், பிரபல வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான 'ஜன் சுராஜ்' கட்சியும் களமிறங்கி உள்ளது. தன் கட்சிக்கு ஓட்டளிக்குமாறு, பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், அதிரடியாக கூறியிருப்பதாவது: பீஹார் தேர்தலில், நியாயமாக எங்களுத்தான் மக்கள் ஓட்டளிக்க வேண்டும். ஏனென்றால், பீஹாரை ஏற்கனவே ஆண்ட கட்சிகள், மாநில வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை.
தங்களை வளப்படுத்திக் கொள்ளும் விஷயங்களை மட்டுமே செய்துள்ளன.எங்களுக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைத்தால், 'சத் பூஜை' உள்ளிட்ட பண்டிகை களின் போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வர வேண்டும் என்ற கஷ்டம், பீஹார் மக்களுக்கு இருக்காது.
ஏனென்றால், பீஹாரிலேயே அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி விடுவோம். பீஹாரிகள் யாரும், தமிழகம் உள்ளிட்ட வேறு மாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்ல வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

