காங்.,வுடன் இணைந்து அழிந்து போகாதீர் : சரத்பவார், உத்தவ்வுக்கு மோடி அறிவுரை
காங்.,வுடன் இணைந்து அழிந்து போகாதீர் : சரத்பவார், உத்தவ்வுக்கு மோடி அறிவுரை
UPDATED : மே 11, 2024 02:48 AM
ADDED : மே 11, 2024 02:42 AM

மும்பை: காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதிலாக சரத்பவாரும், உத்தவ் தாக்கரேயும், அஜித்பவார் , ஏக்நாத் ஷிண்டே வுடன் இணைந்து விடலாம் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி மஹாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது,
இந்து தர்மத்தை அழிக்க காங்கிரஸ் கட்சி சதி செய்து வருகிறது. ஜூன் 04 ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் சரத்பவாரும், உத்தவ் தாக்ரேயும் காங்கிரசுடன் இணைய முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதிலாக சரத்பவார் தன் சரத்சந்திரபவார் கட்சியை அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும், உத்தவ் தாக்கரே தனது கட்சியை ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியுடன் இணையலாம். இவ்வாறு மோடி அறிவுறுத்தியுள்ளார்.