கவலைப்படாதீங்க! உதவிக்கு நாங்க இருக்கோம்: மனித நேயத்தை நிரூபித்த குஜராத் முஸ்லீம்கள்
கவலைப்படாதீங்க! உதவிக்கு நாங்க இருக்கோம்: மனித நேயத்தை நிரூபித்த குஜராத் முஸ்லீம்கள்
UPDATED : செப் 01, 2024 09:30 PM
ADDED : செப் 01, 2024 09:25 PM

காந்திநகர்: மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வதோதரா பகுதியில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் இறங்கிய அப்பகுதி முஸ்லீம் மக்களின் மனித நேயம்,' இது தான் இந்தியா ' என அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள வராலாறு காணாத வெள்ளம் மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ராஜ்கோட், ஆனந்த், அகமதாபாத், பாரூட், கேதா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தில் முதலைகளும் அடித்து வரப்பட்டதால் மக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.
மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் பேரிடர் மீட்புக்குழுவினர். பொதுமக்கள் சுமார் 18,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உள்ளனர்.
இதனிடையே வதோதரா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மாடியில் தஞ்சம் அடைந்துள்ள மக்களுக்கு, கழுத்தளவு தண்ணிரில் நீந்தி சென்று உணவு அளித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. வெள்ள நீரின் அளவையும் பொருட்படுத்தாமல் , மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் இறங்கிய அப்பகுதி முஸ்லீம் மக்களின் மனித நேயம் அனைவரின் பாராட்டடுதல்களையும் பெற்றுள்ளது.