ADDED : பிப் 06, 2025 11:06 PM

கொப்பால்: பி.எஸ்சி., படித்த எனக்கு கன்னடம் எழுத தெரியாதா என்று, அமைச்சர் சிவராஜ் தங்கடகி ஆவேசமாக கூறினார்.
கன்னடம் மற்றும் கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொப்பால் காரடகியில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
அங்கு இருந்த எழுத்து பலகையில், 'நல்ல அதிர்ஷ்டம்' என்று கன்னடத்தில் திணறி, திணறி எழுதினார். இதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
அந்த வீடியோவை பார்த்தவர்கள், 'கன்னடம் தெரியாதவர்கள் கன்னட துறை அமைச்சரா' என்று கிண்டலாக பதிவு செய்தனர்.
இதுகுறித்து கொப்பாலில் சிவராஜ் தங்கடகி நேற்று அளித்த பேட்டியில், ''நான் பி.எஸ்சி., படித்து உள்ளேன். எனக்கு கன்னடம் எழுத தெரியாதா. என்னை பற்றி பொய் பிரசாரம் பரப்ப சிலர் உள்ளனர். ஊடகங்கள் உண்மை என்ன என்று தெரிந்து கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும்.
''நான் 12 ஆண்டுகள் அமைச்சராக இருந்து உள்ளேன். பல துறைகளை திறம்பட கையாண்டு இருக்கிறேன். கன்னடம் மற்றும் கலாசார அமைச்சராக நான் சிறப்பாக பணியாற்றுவதை எனது எதிரிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை,'' என்றார்.

