ADDED : ஜன 02, 2025 11:39 PM

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தை சந்தித்ததை பத்திரிகையாளர் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம். நீங்கள் ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள், அங்கு ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர் இருந்தால், சந்திக்க மாட்டீர்களா? அதே போல் தான் 1975ல் இருந்து எனக்கு தெரிந்தவர் லாலு பிரசாத்.
ஆரிப் முகமது கான், பீஹார் கவர்னர்
மீண்டும் மாநில அந்தஸ்து!
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது. மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது எங்களின் வாக்குறுதியில் ஒன்று. உச்ச நீதிமன்றமும் தன் தீர்ப்பில் மாநில அந்தஸ்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மத்திய அரசு வாக்குறுதியை நிறைவேற்றும் என நம்புகிறோம்.
ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் தேசிய மாநாட்டு கட்சி,
சித்தராமையாவால் முடியாது!
கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் பிரியங்க் கார்கேவை ராஜினாமா செய்யக் கோரினோம். ஆனால், அவர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என முதல்வர் சித்தராமையா கூறினார். அவரே, 'முடா' வழக்கில் விசாரணையில் இருப்பதால், அவரால் அமைச்சரை பதவி விலக சொல்ல முடியாது.
பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர், பா.ஜ.,