வீட்டு வாசலுக்கு அரசு திட்டம் பெங்களூரில் இன்று துவக்கம்
வீட்டு வாசலுக்கு அரசு திட்டம் பெங்களூரில் இன்று துவக்கம்
UPDATED : ஜன 03, 2024 02:25 AM
ADDED : ஜன 03, 2024 02:24 AM

பெங்களூரு :அரசு திட்டங்கள் வீட்டு வாசலுக்கு வரும் திட்டத்தை, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், இன்று பெங்களூரில் துவக்கி வைக்கிறார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., அரசு நடக்கிறது.
பொது மக்கள், அரசு திட்டங்களை பெறுவதற்காக, அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்கும் வகையில், புதிய திட்டத்தை துவங்க, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இதன்படி, 'வாசலுக்கு வந்தது அரசு - சேவைக்கு இருக்கட்டும் ஒத்துழைப்பு' என்ற பெயரில், அரசு திட்டங்கள் வீட்டு வாசலுக்கு வரும் திட்டம் வகுக்கப்பட்டது.
இத்திட்டத்தை, பெங்களூரு கே.ஆர்.புரத்தில் உள்ள ஐ.டி.ஐ., விளையாட்டு மைதானத்தில், இன்று காலை 9:30 மணிக்கு, துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்கிறார்.
மஹாதேவபுரா, கே.ஆர்.புரம் தொகுதி மக்கள் இதில் பங்கேற்கலாம்.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, இணையதளத்தில் பதிவு செய்ய, மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 15 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.
பெங்களூரு மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ ரயில், குடிசை மேம்பாட்டு ஆணையம், போலீஸ், பி.எம்.டி.சி., வருவாய் துறை உட்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்று, மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து, அரசு திட்டங்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பர்.