லாரி மீது டபுள் டெக்கர் பஸ் மோதி விபத்து; 5 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு
லாரி மீது டபுள் டெக்கர் பஸ் மோதி விபத்து; 5 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு
UPDATED : நவ 21, 2024 10:23 AM
ADDED : நவ 21, 2024 10:09 AM

அலிகார்: உத்தரபிரதேசத்தில் டபுள் டெக்கர் பஸ், லாரி மீது மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசம், அலிகார் அருகே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் டில்லியில் இருந்து அஸாம்கரை நோக்கி, பயணிகளை ஏற்றிக் கொண்டு டபுள் டெக்கர் பஸ் சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இதில், 5 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்ஸின் இடிபாடுகளில் சிக்கினர். இதனை அறிந்த உள்ளூர் மக்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.