'டபுள் டெக்கர்' மெட்ரோ ரயில் விரைவில் பணிகள் துவக்கம்
'டபுள் டெக்கர்' மெட்ரோ ரயில் விரைவில் பணிகள் துவக்கம்
ADDED : நவ 14, 2024 05:37 AM
பெங்களூரு: 'நம்ம மெட்ரோ' மூன்றாம் கட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதில், ராகிகுட்டா, சில்க் போர்டு இடையே இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் முடிவடைந்த பின்னர், 'டபுள் டக்கர் ' மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடைபெற உள்ளது.
பெங்களூரு மெட்ரோ நிறுவனம், மெட்ரோ ரயில் 3ம் கட்ட விரிவாக்க பணிகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே, 44.65 கி.மீ.,க்கு நிலங்களை கையகப்படுத்த தொடங்கியுள்ளது.
ராகிகுட்டா மற்றும் சில்க் போர்டு இடையே இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் முடிவடைந்த பின்னர், 'டபுள் டக்கர் ' மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று இடங்களில் இரண்டு அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என கூறப்படுகிறது.
ஜே.பி.நகர்., 4வது ஸ்டேஜில் இருந்து கெம்பாபுரா வழித்தடத்திலும், ஹொசஹள்ளியில் இருந்து கடபகெரே வழித்தடத்திலும் ரயில்கள்இயக்கப்படும்.
இந்த ரயில் நிலையங்களில் டபுள் டெக்கருக்கான பாதைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் அமையும்.

