காங்., பிரமுகர் தொல்லையால் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை
காங்., பிரமுகர் தொல்லையால் டாக்டர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : பிப் 14, 2024 05:28 AM

கதக் : காங்கிரஸ் பிரமுகர் தொல்லையால், டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கதக் ரோன் ஹிரேஹாலா கிராமத்தை சேர்ந்தவர் சசிதர் ஹட்டி, 45. டாக்டரான இவர், கதக் ரோனில் தனியார் மருத்துவமனை நடத்தினார். ரோனை சேர்ந்த, காங்கிரஸ் பிரமுகர் சரணகவுடா பாட்டீலுடன் சேர்ந்து, மணல் விற்கும் வியாபாரத்திலும் ஈடுபட்டார்.
அரசின் அனுமதி பெற்று, ஆற்றில் இருந்து மணல் அள்ளி விற்றனர்.
வியாபார கணக்கு, வழக்கை சசிதர் ஹட்டி பார்த்து வந்தார்.
ஆனால் பணத்தை கையாடல் செய்வதாக கூறி, சசிதர் ஹட்டிக்கு, சரணகவுடா பாட்டீல் தொடர்ந்து, தொல்லை கொடுத்து வந்து உள்ளார். இதனால் மனம் உடைந்த சசிதர் ஹட்டி, நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், 'எனது சாவுக்கு, காங்கிரஸ் பிரமுகர் சரணகவுடா பாட்டீல் தான் காரணம். அவருக்கு தக்க தண்டனை கிடைக்க, அமைச்சர் எச்.கே.பாட்டீல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
சசிதரின் மனைவி அளித்த புகாரின் பேரில், சரணகவுடா பாட்டீல் மீது, ரோன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

