தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கும்பமேளாவில் புனித நீராடினார் திரவுபதி முர்மு

கும்பமேளாவில் புனித நீராடினார் திரவுபதி முர்மு

கும்பமேளாவில் புனித நீராடினார் திரவுபதி முர்மு


UPDATED : பிப் 10, 2025 12:54 PM

ADDED : பிப் 10, 2025 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2025 12:54 PM ADDED : பிப் 10, 2025 11:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரயாக்ராஜ்: மஹா கும்பமேளாவை முன்னிட்டு, திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடினார்.

கடந்த மாதம் ஜன.,13ல் உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா துவங்கியது. இதுவரை 43 கோடி பேர் புனித நீராடி உள்ளனர். பிரதமர் மோடி கடந்த 5ம் தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் பிரபலங்களும் புனித நீராடி உள்ளனர்.

இந்நிலையில், புனித நீராடுவதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரயாக்ராஜ் நகர் வந்தார். அவரை கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, திரிவேணி சங்கமம் வந்த அவர், அங்கிருந்த பறவைகளுக்கு உணவு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us