வாகன ஓட்டிகளே சரியான வாய்ப்பு; 50 சதவீத ஆபரை அறிவித்தது பெங்களூரு போலீஸ்
வாகன ஓட்டிகளே சரியான வாய்ப்பு; 50 சதவீத ஆபரை அறிவித்தது பெங்களூரு போலீஸ்
ADDED : ஆக 22, 2025 07:12 AM

பெங்களூரு: போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்களை செலுத்த, வாகன ஓட்டிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியை பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
அபராதத் தொகையை செலுத்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியானது நாளை (ஆக.,23) முதல் செப்.,12 வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தாத வாகன ஓட்டிகள் இந்த காலகட்டத்தில், விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் இருந்து பாதியை செலுத்தினால் போதும்.
செலுத்தும் வழிமுறைகள்
கர்நாடகா மாநில போலீஸ் (KSP) செயலி அல்லது பிடிபி ASTraM செயலி மூலம் இந்தத் அபராதத் தொகையை செலுத்தலாம்
வாகனப் பதிவு எண்ணை வைத்து அருகே உள்ள போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் செலுத்தலாம்
போக்குவரத்து மேலாண்மை மையங்களில் செலுத்தலாம்
கர்நாடகா ஒன் அல்லது பெங்களூரு ஒன் வலைத்தளங்களிலும் விவரங்களைப் பெறலாம் மற்றும் பணம் செலுத்தலாம்
இதேபோன்று கடந்த 2023ம் ஆண்டு பெங்களூரு போலீசார் தள்ளுபடியை அறிவித்தனர். அப்போது, சுமார் ரூ. 5.6 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற வாய்ப்புகள் பெங்களூரு மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வது குறிப்பிடத்தக்கது.