ADDED : டிச 27, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இம்பால்: மணிப்பூரில், 40 கோடி ரூபாய் மதிப்பிலான, 'யாபா' போதை மாத்திரை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் போதை பொருள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அசாம் ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து கடந்த 24ம் தேதி ஜிரிபாம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட, 1.6 லட்சம் யாபா போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதை பொருட்களின் மதிப்பு 40 கோடி ரூபாய்.
இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த போதை மாத்திரையானது நரம்பு மண்டலத்தை தாக்கும் வலிமை உடையது.

