ADDED : ஜன 22, 2025 08:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நூஹ்:ஹரியனாவில், விபத்தில் உயிரிழந்தவர் காரில் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
டில்லி -மும்பை விரைவுச் சாலையில் அதிவேகமாக வந்த ஒரு கார், ஹரியானாவின் நூஹ் மாவட்டம் கேரி கலான் கிராமம் அருகே, சாலைத் தடுப்பில் மோதியது.
தகவல் அறிந்து, போலீசார் விரைந்து வந்தனர். டிரைவர் சீட்டில் இருந்தவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அடுத்த சீட்டில் இருந்தவர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடினார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காரில் நடத்திய சோதனையில், 17 கிலோ 'சுரா போஸ்ட்' கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்ட காரில் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதால், இருவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணை நடந்து வருகிறது.

