ADDED : பிப் 06, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.டி.நகர்; பெங்களூரு ஆர்.டி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக, சி.சி.பி., போதை தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை 1:00 மணிக்கு அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அலமாரியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஹெராயின், எம்.டி.எம்.ஏ., மாத்திரைகள், ஹசிஷ் ஆயில் உட்பட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். வியாபாரி இம்ரான் உசேன், 35 கைது செய்யப்பட்டார்.
அசாம், நாகலாந்து மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு போதை பொருட்களை வாங்கி வந்து, இங்கு அதிக விலைக்கு விற்றது தெரிந்தது.