தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 5 இடங்களில் வாகன நிறுத்தகம் அமைக்கிறது டி.டி.ஏ., அமைப்பு

 5 இடங்களில் வாகன நிறுத்தகம் அமைக்கிறது டி.டி.ஏ., அமைப்பு

 5 இடங்களில் வாகன நிறுத்தகம் அமைக்கிறது டி.டி.ஏ., அமைப்பு


ADDED : ஏப் 24, 2026 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 08:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:டில்லியில், ஐந்து இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்தகங்களை நிறுவ, டில்லி வளர்ச்சி ஆணையமான, டி.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, டில்லி வளர்ச்சி ஆணைய அதிகாரி கூறியதாவது:

காராகர்டூமா, ஓக்லா தொழிற்பேட்டை தளம் 1, தில்ஷாத் கார்டன், துவாரகா மற்றும் சைனி என்கிளேவ் ஆகிய இடங்களில், பல அடுக்கு வாகன நிறுத்தகங்கள் நிறுவப்பட உள்ளன. இந்த இடங்களில், மொத்தமாக, 1261 கார்களை நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்தக வளாகங்கள் அமைய உள்ளன.

அதில், 248 கார்களை நிறுத்தும் வகையில் காராகர்டூமா, ஓக்லா தொழிற்பேட்டையில் 362, 232 கார்களை நிறுத்தும் வகையில் தில்ஷாத் கார்டன்ஸ், 134 கார்களை நிறுத்தும் வகையில் துவாரகா மற்றும், 285 கார்களை நிறுத்தும் வகையில் சைனி என்கிளேவ் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

அடுத்த, மூன்றாண்டுகளில் இந்த பல அடுக்கு வாகன நிறுத்தகங்கள் அமைக்கப்படும்.

இதில், காராகர்டூமா மற்றும் துவாரகாவில் அமைய உள்ள வாகன நிறுத்தகங்கள், உயர்ந்த அடுக்கு மாடி கட்டடத்தில் அமைய உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம், டில்லி வளர்ச்சி ஆணையம் சார்பில், நேரு பிளேஸ் டிஸ்ட்ரிக்ட் சென்டரில் நவீன வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்ததகங்கள் அமைக்கப்பட்டன.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us