ADDED : மார் 19, 2025 11:08 PM
சிவில் லைன்ஸ்:கடந்த நிதி ஆண்டில் டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் வருவாய் இரட்டிப்பாக்கியுள்ளதாக ராஜ் நிவாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஜூலையில் கடும் நிதி நெருக்கடியில் இருந்த நிலையில், விரைவில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிக்காட்டுவதாக துணைநிலை கவர்னர் உறுதி அளித்ததை சுட்டிக்காட்டி, இதுதொடர்பாக 'எக்ஸ்' பக்கத்தில் துணைநிலை கவர்னர் மாளிகை வெளியிட்ட பதிவு:
கடந்த 2019 - 20 முதல் 2021 - 22 காலகட்டத்தில் 3,579 கோடி ரூபாயாக இருந்த டி.டி.ஏ., வருவாய், 2022 - 23 முதல் 2024 - 25 வரை 6,759 கோடி ரூபாயாக உயர்ந்தது. அந்த வகையில் 2023 - 24 நிதி ஆண்டில் 511 கோடி ரூபாய் உபரி வருவாய் கிடைத்தது. 2024 - 25 நிதி ஆண்டில் 1,299 கோடியாக வருவாய் உயர்ந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் டி.டி.ஏ., 89 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் அதன் வருவாய் நிர்ணயிக்கப்பட்டதை விட வருவாய் 1,299 கோடி ரூபாயாக உயர்ந்தது.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.