அக்., 11, 12ல் துமகூரு தசரா அதிகாரிகளுக்கு உத்தரவு
அக்., 11, 12ல் துமகூரு தசரா அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : செப் 23, 2024 05:40 AM

துமகூரு,: மைசூரு தசரா போன்று, துமகூரு தசரா கொண்டாடுவது குறித்து, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது நடந்த உரையாடல்:
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்: முதன் முறையாக மைசூரு தசரா போன்று, நடப்பாண்டு மாவட்டத்தில் அக்., 11, 12ல் துமகூரு தசரா நடத்தப்பட உள்ளது. இதில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது.
கலெக்டர் சுபா கல்யாண்: பெண்கள், குழந்தைகள் நலத்துறை சார்பில் ரங்கோலி, தசரா கொலு போட்டி நடத்த வேண்டும். இரண்டு நாட்கள் இவ்விழாவில் இசை கச்சேரியில் பிரபல பின்னணி பாடகர்கள், குழந்தைகளுக்கான பாரம்பரிய இசை நிகழ்ச்சி, மாரத்தான் போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
வனத்துறை அதிகாரி அனுபமா: மூன்று யானைகள், காளைகள், குதிரைகள், பழங்கால கார்கள் அணிவகுப்பு, 70க்கும் மேற்பட்ட கடவுள் சிலைகள் ஊர்வலம், 15 கலை குழுக்கள் இடம் பெறும்.
இவ்வாறு கலந்துரையாடினர்.