தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தசரா சிறப்பு சுற்றுலா பேக்கேஜ்: கே.எஸ்.டி.டி.சி., அறிவிப்பு

தசரா சிறப்பு சுற்றுலா பேக்கேஜ்: கே.எஸ்.டி.டி.சி., அறிவிப்பு

தசரா சிறப்பு சுற்றுலா பேக்கேஜ்: கே.எஸ்.டி.டி.சி., அறிவிப்பு

ADDED : செப் 25, 2024 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 09:22 PM

Follow on Google
அ நிறம் | அளவு

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, அக்., 3ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. விழா நடக்கும் 10 நாட்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல வெளிநாடுகளில் இருந்தும் மைசூரில் சுற்றுலா பயணியர் குவிந்து விடுவர்.

இதற்கு முன்னோட்டமாக, சுற்றுலா பயணியரை மைசூருக்கு ஈர்க்கும் வகையில், மாணவர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் துவங்கிவிட்டன. நகர் முழுதும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

மின்னொளியில் ஜொலிக்கும் அரண்மனை, நகர சாலைகள் கண்களுக்கு விருந்தளிக்கும். இந்நிலையில், கே.எஸ்.டி.டி.சி., எனும் கர்நாடக மாநில சுற்றுலா வளர்ச்சி வாரியம் சார்பில், தசரா சிறப்பு சுற்றுலா பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் மைசூரில் இருந்து, ஒரு நாள் சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைசூரு, கே.ஆர்.எஸ்., அணை, பிருந்தாவனம் பூங்கா, ஸ்ரீரங்கப்பட்டணா ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். ஒருவருக்கு 2,180 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தசரா விழாவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள சுற்றுலா பேக்கேஜ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா விபரம் நாட்கள் கட்டணம்

ஜோக் நீர்வீழ்ச்சி - கோகர்ணா - கோவா 5 ரூ.7,990

நஞ்சன்கூடு - பண்டிப்பூர் - முதுமலை - ஊட்டி - தொட்டபெட்டா 2 ரூ.3,359

ஸ்ரவணபெலகொளா - பேலுார் - ஹலேபீடு 1 ரூ.1,089

சோம்நாத்பூர் - சிவனசமுத்திரா - தலக்காடு - முடுகுதொரே 1 ரூ.755

நஞ்சன்கூடு - ஹிம்வத் கோபாலசுவாமி கோவில் - பி.ஆர்.மலை 1 ரூ.728

கே.ஆர்.எஸ்., அணை பின்புறம் - வேணுகோபால சுவாமி கோவில் - செலுவநாராயணசாமி கோவில் - யோக நரசிம்ம சுவாமி கோவில் - ஆதிசுஞ்சனகிரி 1 ரூ.660

துபாரே - அபே நீர்வீழ்ச்சி -ராஜா இருக்கை - நிசர்கதாமா - பைலுகுப்பே தங்க கோவில் 1 ரூ.979

ஜகன்மோகன் அரண்மை கலை அரங்கம் - மைசூரு மிருக காட்சி சாலை - சாமுண்டி மலை - மைசூரு அரண்மனை - செயின்ட் பிலோமினாஸ் பேராலயம் - ஸ்ரீரங்கப்பட்டணா கும்பாஜ் - திப்பு சுல்தான் கோடை அரண்மனை - ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் - பிருந்தாவன் பூங்கா 1 ரூ.510

- நமது நிருபர் -

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, அக்., 3ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. விழா நடக்கும் 10 நாட்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல வெளிநாடுகளில் இருந்தும் மைசூரில் சுற்றுலா பயணியர் குவிந்து விடுவர்.

இதற்கு முன்னோட்டமாக, சுற்றுலா பயணியரை மைசூருக்கு ஈர்க்கும் வகையில், மாணவர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் துவங்கிவிட்டன. நகர் முழுதும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

மின்னொளியில் ஜொலிக்கும் அரண்மனை, நகர சாலைகள் கண்களுக்கு விருந்தளிக்கும்.

இந்நிலையில், கே.எஸ்.டி.டி.சி., எனும் கர்நாடக மாநில சுற்றுலா வளர்ச்சி வாரியம் சார்பில், தசரா சிறப்பு சுற்றுலா பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் மைசூரில் இருந்து, ஒரு நாள் சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மைசூரு, கே.ஆர்.எஸ்., அணை, பிருந்தாவனம் பூங்கா, ஸ்ரீரங்கப்பட்டணா ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். ஒருவருக்கு 2,180 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தசரா விழாவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள சுற்றுலா பேக்கேஜ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us