தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'துப்புரவு தொழிலாளர்களை காப்பது கடமை'

'துப்புரவு தொழிலாளர்களை காப்பது கடமை'

'துப்புரவு தொழிலாளர்களை காப்பது கடமை'


ADDED : அக் 27, 2024 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களின் பொறுப்பு. உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், போலீசாரை தொடர்பு கொள்ளுங்கள்,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார்.

பெங்களூரு, பூபசந்திராவின் உர்வி கன்வென்ஷன் ஹாலில், மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில் நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா பேசியதாவது:

துப்புரவு தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு அளிப்பது எங்களின் கடமை. உங்களுக்கு எந்த பிரச்னை என்றாலும், போலீசாரை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு போலீசார் உதவுவர்.

போதைப்பொருட்களை ஒழிப்பதில், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். உங்களின் சுற்றுப்பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பது தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தாருங்கள். அப்போதுதான் இதை கட்டுப்படுத்த முடியும்.

மாதந்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்துவதால், மக்களுக்கு உதவியாக உள்ளது. போலீஸ் நிலையத்துக்கு முடியாதவர்கள், தங்களின் பிரச்னையை சரி செய்து கொள்ள உதவியாக இருக்கும்.

நகரின் ஒவ்வொரு பிரிவிலும், மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. அங்கு மகளிர் ஆலோசகர் இருப்பார். மகளிர் போலீசாரும் இருப்பர். அவர்களை தொடர்பு கொண்டு, உங்களின் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us