தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டில்லி சட்டசபைக்கு வந்த இ - மெயில் குண்டு மிரட்டல்

 டில்லி சட்டசபைக்கு வந்த இ - மெயில் குண்டு மிரட்டல்

 டில்லி சட்டசபைக்கு வந்த இ - மெயில் குண்டு மிரட்டல்


ADDED : ஏப் 13, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:டில்லி சட்டசபையில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக வந்த, இ - மெயில் தகவலை அடுத்து, அந்த வளாகம் முழுவதும் சல்லடை போடப்பட்டது. எனினும், சந்தேகப்படும் படியாக எந்த பொருளும் சிக்கவில்லை.

வழக்கமாக, ஒவ்வொரு திங்கள் கிழமையும், டில்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக இ - மெயில் அந்தந்த அதிகாரிகளுக்கு வரும். அதையடுத்து, அந்த இடங்களுக்கு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீசார் அனுப்பி வைக்கப்படுவர்.

ஆனால், அந்த சோதனை முடிவில், இ - மெயில் தகவல் பொய் என்பது தெரிய வரும். அந்த வகையில், டில்லி சட்டசபைக்கு நேற்று காலை, மர்ம இ - மெயில் வந்தது. அதை திறந்து பார்த்த போது, எங்கிருந்து வந்தது என்பது தெரியாத வகையில், வெறும் மிரட்டல் மட்டும் இருந்தது.

அதையடுத்து, அந்த தகவல், டில்லி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சட்டசபை வளாகத்தில் அவர்கள் குவிந்து, சோதனை மேற்கொண்டனர்.

எனினும், சோதனையின் முடிவில் எவ்வித சந்தேகப்படும் படியான பொருட்களும் கைப்பற்றப்படாததால், இ - மெயிலில் வந்த தகவல் பொய் என்பது தெரிய வந்தது.

எங்கிருந்து அந்த பொய் இ - மெயில் மிரட்டல் வந்தது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us