ADDED : மார் 16, 2024 10:53 PM

ஷிவமொகா; லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கர்நாடகா ஈடிகா சமூக தலைவர்கள், நிர்வாகிகளுடன், ஈடிகா சமூக மடாதிபதி பிரணவானந்த சுவாமி, பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். தேர்தலில் போட்டியிடும் ஈடிகா சமூக வேட்பாளர்களை, கட்சி பாகுபாடின்றி ஆதரிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதன் பின்னர் மடாதிபதி அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் ஷிவமொகா தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமாரை, நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இதற்கு காரணம் கீதாவின் சகோதரரும், அமைச்சருமான மது பங்காரப்பா தான். அமைச்சர் ஆன பின்னர், நமது சமூக வளர்ச்சிக்காக அவர் எதுவும் செய்யவில்லை. 'பிரணவானந்த சுவாமி ஈடிகா சமூக மடாதிபதியா?' என, சந்தேகம் கிளப்பினார்.
ஷிவமொகாவில் ஈடிகா சமூகம் சார்பில், வேட்பாளர் களம் இறக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

