மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: அதிர்வுகளால் குலுங்கிய அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து
மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: அதிர்வுகளால் குலுங்கிய அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து
ADDED : செப் 30, 2025 10:10 AM

புதுடில்லி: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உணரப்பட்டது.
இந்திய-மியான்மல் எல்லைக்கு அருகில் இன்று காலை 6.10 மணியளிவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரில் உள்ள உக்ருலுக்கு தென் கிழக்கே 27 கி.மீ., தொலைவில் 15 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டரில் 4.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. அதன் அதிர்வுகள் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகளோ, பொருள் இழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களாக வடகிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக செப்.14, செப்.21 ஆகிய தேதிகளில் மேகாலயாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது, குறிப்பிடத்தக்கது.