பூகம்ப பாதிப்பு : ஜப்பான் பிரதமருக்கு கடிதம் எழுதி மோடி ஆறுதல்
பூகம்ப பாதிப்பு : ஜப்பான் பிரதமருக்கு கடிதம் எழுதி மோடி ஆறுதல்
ADDED : ஜன 06, 2024 02:35 AM

புதுடில்லி; ஜப்பான் பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அந்நாட்டு பிரதமருக்கு ,நம் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
ஜப்பானில் ஜன. 01-ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்திற்கு 64 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் அனைத்தும் மோசமாக சேதமாகியிருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஜன.01 ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்க சம்பவம் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஜப்பானுடனான உறவை இந்தியா மிகவும் மதிக்கிறது.
ஜப்பானுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் மோடி தெரிவித்துள்ளார்.