டில்லியில் நிலநடுக்கம்; நொய்டா, காஜியாபாத், குருகிராம் பகுதிகளில் நிலஅதிர்வு!
டில்லியில் நிலநடுக்கம்; நொய்டா, காஜியாபாத், குருகிராம் பகுதிகளில் நிலஅதிர்வு!
UPDATED : ஜூலை 10, 2025 09:43 AM
ADDED : ஜூலை 10, 2025 09:39 AM

புதுடில்லி: டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (ஜூலை 10) காலை 9.04 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
ஹரியானாவின் ஜஜ்ஜாரில் காலை 9:04 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
காலை 9.04 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு சில வினாடிகள் நீடித்தது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் குவிந்தனர். ஹரியானாவின் ரோஹ்தக்கை பகுதியில் நிலநடுக்கம் மையமாக கொண்டிருந்தது.
இந்த பகுதி டில்லியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. டில்லி, நொய்டா, காஜியாபாத், குருகிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.