sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிமாச்சலில் நிலநடுக்கம்; மியான்மரும் குலுங்கியது

/

ஹிமாச்சலில் நிலநடுக்கம்; மியான்மரும் குலுங்கியது

ஹிமாச்சலில் நிலநடுக்கம்; மியான்மரும் குலுங்கியது

ஹிமாச்சலில் நிலநடுக்கம்; மியான்மரும் குலுங்கியது


ADDED : ஏப் 14, 2025 04:05 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : நம் நாட்டின் ஹிமாச்சல பிரதேசத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மர் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 3,600 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பு மறைவதற்குள், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது.

மியான்மர், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

முதலில், காலை 9:00 மணிக்கு நம் நாட்டின் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.4ஆக பதிவானது. மிதமாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், வீடுகள் குலுங்கின.

மக்கள் வீடுகளை விட்டு அலறியபடி வெளியேறினர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இரண்டாவதாக, நம் அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மெய்டிலா பகுதியில் உணரப்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது.

கடந்த மார்ச்சில் நிலநடுக்கம் ஏற்பட்டு, இன்னும் மீட்பு பணிகள் முழுமையடையாத மண்டலே மற்றும் நைபிடாவ் நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டடங்கள், வீடுகள் குலுங்கின.

சில குடியிருப்புகளின் கூரைகள் பெயர்ந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாவிட்டாலும், ஏற்கனவே நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பதற்றத்தை அதிகரித்தது.

மூன்று மற்றும் நான்காவது நிலநடுக்கம் தஜிகிஸ்தான் நாட்டில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது.

அடுத்ததாக, காலை 10:36 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 3.9 ஆக பதிவானது. இந்த இரு நிலநடுக்கங்களும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சில இடங்களில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டன.






      Dinamalar
      Follow us