பாகிஸ்தானில் நிலநடுக்கம்: காஷ்மீர், டில்லியிலும் நிலஅதிர்வு
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: காஷ்மீர், டில்லியிலும் நிலஅதிர்வு
ADDED : ஜன 11, 2024 03:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பாகிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று (ஜன.,11) நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல் ஆப்கானிஸ்தானிலும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதி, டில்லி என்சிஆர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் பற்றிய பாதிப்பு இதுவரை வெளியாகவில்லை.