தெலுங்கானாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு
தெலுங்கானாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு
UPDATED : டிச 04, 2024 12:46 PM
ADDED : டிச 04, 2024 09:11 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் இன்று (டிச.,04) காலை 7.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் திருவூரு, ஜக்கையா பேட்டை, ஹைதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி, உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது. ஆந்திராவிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்கள்
இடம் - ரிக்டர் அளவு
ஆந்திரா, இந்தியா - 5.6
தெலுங்கானா, இந்தியா - 5.6
விகன் சிட்டி, பிலிப்பைன்ஸ் - 5.7
சுவா, பிஜி - 5.4
ஜலிஸ்கோ, மெக்சிகோ - 5.4
ஒகினாவா, ஜப்பான் 5.2
சுலவெசிம் இந்தோனேசியா - 5.2
எஸ்கஷேம், தஜிகிஸ்தான்