வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
ADDED : பிப் 25, 2025 08:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா; வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட, அதன் அதிர்வுகள் கோல்கட்டாவில் உணரப்பட்டன.
வங்கக்கடல் பகுதியில் இன்று (பிப்.25) காலை 6.10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.
கோல்கட்டாவில் இருந்து 340 கி.மீ .,தொலைவில், 91 கி.மீ., ஆழத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கோல்கட்டாவிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் நிலைமை என்ன என்பதை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.
அதேநேரத்தில், நிலநடுக்கம் பற்றிய விவரத்தை அறிந்த பலரும், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.