மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி ஆகணுமா: பட்டதாரிகள் 40 பேருக்கு வேலை ரெடி
மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி ஆகணுமா: பட்டதாரிகள் 40 பேருக்கு வேலை ரெடி
UPDATED : செப் 10, 2024 02:20 PM
ADDED : செப் 10, 2024 08:27 AM

புதுடில்லி: மத்திய அரசின் ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தில் (Export Credit Guarantee Corporation of India) 40 பி.ஓ., (பிரபேஷனரி அதிகாரி) பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.
எக்ஸ்போர்ட் கிரெடிட் கார்ப்பரேஷன் என்பது மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. மும்பையில் தலைமையகம் உள்ளது. இந்நிறுவனத்தில் பி.ஓ., பிரபேஷனரி அதிகாரி பதவிகளுக்கு 40 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் எஸ்.சி., பிரிவினருக்கு 6 பணியிடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 4 பணியிடங்களும், ஓ.பி.சி.,பிரிவினருக்கு 11 பணியிடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 3 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://ecgc.in./என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
கடைசிநாள்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.