எடியூரப்பா காலை தொட்டு வணங்கிய முதல்வர் சதானந்த கவுடா
எடியூரப்பா காலை தொட்டு வணங்கிய முதல்வர் சதானந்த கவுடா
ADDED : ஆக 05, 2011 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : முதல்வராக பதவியேற்க வந்த சதானந்த கவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் காலை தொட்டு வணங்கினார்.
கர்நாடகா ராஜ்பவனில் நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார். முதல்வராக பதவியேற்க வந்த சதானந்த கவுடா, எடியூரப்பாவின் காலை தொட்டு வணங்கினார். எடியூரப்பா அவரை கட்டிப்பிடித்து தழுவினார். பின்னர் சதானந்த கவுடாவுக்கு ஆதரவு கொடுத்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் ÷ஷாபா, கவுடாவின் கைகளை பிடித்து, மேலே தூக்கி காண்பித்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த எதிரணியினரான ஈஸ்வரப்பா, அனந்தகுமார் உட்பட பலர் முகம் சுளித்தனர்.